வானதி சீனிவாசனுக்கு ஐசியூவில் சிகிச்சை.. மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கடந்த 4 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த சூழலில் நேற்று காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக வானதி சீனிவாசன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 48 மணி நேரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதன் காரணமாக அவரின் தேர்தல் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை நிர்வாகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.. அதில் “ வானதி சீனிவாசன் காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவருக்கு ஆண்டி பயாடிக் மருந்துகள் பிற ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.. 2 நாட்கள் படுக்கை ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருந்து காரணமாக ஏற்பட்ட சிறு ஒவ்வாமையால் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.. தற்போது வானதி சீனிவாசன் உடல்நிலை சீராக உள்ளது. பேசக்கூடிய நிலையில் நலமாக உள்ளார்.. அவரின் உடல்நிலை முழுமையாக குணமடைய 4 நாட்களாகும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜோசப் விஜய் முதலில் நல்ல கணவனாக, குடும்பஸ்தனாக இருக்க வேண்டும்..” மீண்டும் விளாசிய நயினார்..!

Source link