ஈரான்,
வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமெத்த உலகுக்கும் கவலையை ஏற்படுத்தி இருக்கும் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் வீரியமாக நடந்து வருகிறது. இந்த போரின் தொடக்க நாளிலேயே தங்கள் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை பறிகொடுத்த ஈரான், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகளை ரகசியமாக மேற்கொண்டு வந்தது. இதில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி காமேனியின் மகன், 56 வயதான முஜ்தபா காமேனி தேர்வானதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது இதற்கு ஈரான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடந்து வரும் மோதலை ஈரான் ஊடகங்கள் “ரமலான் போர்” என்று அழைக்கின்றன. எனவே, இவரை “ரமலான் போரில் காயமடைந்த வீரர்” என்று அழைப்பதன் மூலம், தற்போதைய மோதலில் அவர் காயமடைந்திருப்பதை அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டதாகவே தெரிகிறது.
இவர் 1969-ல் புனித நகரமான மஷாத்தில் பிறந்தார்.கொல்லப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இரண்டாவது மகன் ஆவார். மிக இளம் வயதிலேயே ஈரான்-ஈராக் போரில் கலந்துகொண்ட அனுபவம் கொண்டவர். இது அவருக்குப் பாதுகாப்புப் படைகள் மத்தியில் நல்ல மரியாதையைத் தேடித்தந்தது.அவரது நியமனம், மக்கள் விருப்பத்தை விட செல்வாக்கு மிக்க இந்த பாதுகாப்புப் பிரிவுகளின் அழுத்தத்தினால் நிகழ்ந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனி, இப்போது அந்நாட்டின் ராணுவம், நீதித்துறை மற்றும் அரசியல் என அனைத்து விவகாரங்களிலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.
இஸ்ரேல் ஏற்கனவே காமெனியை ஒரு இலக்காக ஏற்கனவே கருதி வந்த நிலையில் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி காயமடைந்ததாக வந்த தகவல் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
