விஜயை மக்கள் புறக்கணிப்பார்கள் – டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

சென்னை,

திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை அண்ணா நினைவிடத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மொழிகள் குறித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷின் அறிக்கையை நான் வரவேற்கிறேன். அவரை நான் பாராட்டுகிறேன், அவரது செய்தி தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் செல்லும், அனைவரும் ஆனந்த் வெங்கடேஷின் கருத்துக்களுக்கு ஆதரவாக நிற்பார்கள். அது எங்களுக்கு நல்லது.

திராவிட கொள்கைகளை திரைப்படத்தின் மூலம் பேசியவர் எம்.ஜி.ஆர். அதனால்தாம் மக்களிடம் சென்றார்.

முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஒற்றை கருத்துடன் ஊர்வலம் வருகிறார் விஜய். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஓட்டு என 2 கோடி ஓட்டு வரும் என்பது விஜய்யின் பேராசை.

விஜய் மக்கள் பிரச்சினை பற்றி பேசினாரா, போராட்டங்கள் செய்தாரா? ஒன்றுமில்லை. வரும் சட்டசபை தேர்தலில் விஜயை மக்கள் புறக்கணிப்பார்கள். தவெகவை தூண்டிவிட்டு அரசியல் செய்வது பாஜகவா? என்பதை நிர்மலா சீதாராமன் விளக்க வேண்டும் என்றார்.

Source link