‘விஜய்க்கு அசையும் சொத்து ரூ.404.58 கோடி உள்ளது’ – வேட்பு மனுவில் தகவல்

சென்னை,

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, அந்த வேட்பாளரின் சொத்து விவரங்கள், வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வேட்பு மனுவில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், இன்று பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், விஜய் தனது வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, விஜய்க்கு ரூ.404.58 கோடி அசையும் சொத்து உள்ளது எனவும், விஜய்யின் அசையா சொத்துகளின் நடப்பு சந்தை மதிப்பு ரூ.220.15 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தனது வசம் ரூ.1.20 கோடி மதிப்பில் 883 கிராம் தங்கம் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். தன் பெயரில் குற்றவியல் வழக்குகள், தண்டனை பெற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்று விஜய் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி. படிப்பை முடிக்காமல் இடையில் நின்றுவிட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மனைவி சங்கீதா பெயரில் ரூ.15.51 கோடி அசையும் சொத்து இருப்பதாக விஜய் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். விஜய்யின் மனைவி வசம் ரூ.4.07 கோடியில் 3,132 கிராம் தங்கம், ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மகன், மகள் வங்கி கணக்கில் ரூ.4 லட்சம் உள்ளது. விஜய்யின் பூர்வீக சொத்தின் மதிப்பு ரூ.21.83 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் வங்கி கணக்கில் ரூ.220 கோடி உள்ளதாகவும், அவரது மனைவி சங்கீதாவின் வங்கி கணக்கில் ரூ.10.43 கோடி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கையில் ரூ.2 லட்சம் ரொக்கம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2024-25ல் மட்டும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு ரூ.184 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் வைத்திருக்கும் கார்களின் மதிப்பு ரூ.7.45 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய்யிடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளி, ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளது. விஜய் மனைவியிடம் 2 கிலோ வெள்ளி, ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.1 லட்சம் ரொக்கம் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் விஜய்யின் மொத்த வருமானம் ரூ.734.45 கோடி என்றும், பல்வேறு தனி நபர்கள், நிறுவனங்களுக்கு விஜய் சுமார் ரூ.76 கோடி கடன் வழங்கியுள்ளார் என்றும் அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Attachment
PDF
Affidavit-1774871159

Preview

Source link