விஜய்க்கு ஆதரவாக பேசிய TN 2026 படக்குழு..!

நடிகர் உமாபதி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டி.என் 2026’. இந்த படத்திற்கு இயக்குனரும், நடிகருமான தம்பி ராமையா கதை, வசனம் எழுதியுள்ளார். ‘டி.என் 2026’ படத்தில் நட்டி நடராஜன் ஹீரோவாக நடித்துள்ளார். முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, இந்த டிரைலர் முழுக்க அரசியல் படமாகவும், ஒரு நடிகர் அரசியல் ஆரம்பிப்பது போன்றும் இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், நட்டி நடராஜன் விஜயின் மேனரிசனத்தை கடைபிடிப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் த.வெ.க தொண்டர்கள் விஜய்யை விமர்சித்து படம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். இந்த நிலையில் இப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் வெகுவாக படக்குழுவை பாராட்டியுள்ளனர். சமகால அரசியலை இப்படம் அப்படியே சித்தரித்திருப்பதாக பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த TN 2026 படக்குழு ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். டி என் 2026 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தம்பி ராமையா, நட்டி நடராஜன் மற்றும் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய தம்பி ராமையா, “ஓருவர் நிலத்தை உழுது, நாட்டு நட்டு, களை எடுத்து, நீர் ஊற்றி பாதுகாத்து வேர்வை சிந்தி அறுவடைக்கு தயாரான போது, திடீரென காட்டுப்பன்றிகள் உள்ளே புகுந்து எல்லாதையும் நாசம் செய்து விடுகிறது. திடீரென விவசாயிகள் வந்து பார்க்கும் போது, ஐயோ என கதறுவார்கள். அந்த உணர்வு தான் இப்போது எல்லாருக்கும் இருக்கு. அதை உணர்ந்த தம்பி விஜயின் ரசிகர்கள் இன்னும் லீக் ஆன திரைபடத்தை கூட பார்க்காமல் இருக்கிறார்கள். அவர்களை நான் பாதம் தொட்டு வணங்குகிறேன். அவர்கள் தான் சினிமாவை காப்பாற்றுகிறார்கள்” என்றார்.

Subscribe to my YouTube Channel


Next Post

Mon Apr 13 , 2026

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

gold jewlery

Source link