“விஜய் ஆதரவுடன் இபிஎஸ் முதல்வராக நினைத்தார்.. 5000 கோடி சம்பாதிக்க பிளான் போட்டார்..” செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் ஈரோடு வேமாண்டம்பாளையத்தில் போது தவெக நிர்வாகி செங்கோட்டையன் பரப்புரையில் ஈடுபட்டார்..

அப்போது பேசிய அவர் “ விஜய் ஆதரவுடன் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று இபிஎஸ் நினைத்தார்.. 10 முறை அதன் மூலம் 5000 கோடி ரூபாய் சம்பாதிக்க இபிஎஸ் திட்டமிட்டார்.. ஆனால் நான் அதனை முறியடித்ததால் எடப்பாடி பழனிசாமி என் மீது கொலை வெறியில் இருக்கிறார்.. 10 முறை தோல்வி கண்டவர் இபிஎஸ்.. அவர் இன்று என்னைப் பற்றி பேசுகிறார்..

அவர் என்னை துரோகி என்று சொல்கிறார்.. நான் முதல்வர், பொதுசெயலாளர் பதவியை விட்டுக் கொடுத்ததால் கிடைத்த பரிசு தான் துரோகி பட்டம்.. முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தவன் துரோகி.. எனக்கு பின் கட்சிக்கு வந்து பொதுசெயலாளர் ஆன பின்னர் கட்சிக்காக உழைத்தவர்களை நீக்கி வருகிறார்..

என்னை இந்த தொகுதியில் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார்.. ஆனால் மக்கள் என்ன நினைக்கின்றனர் என தெரியவில்லை.. மக்கள் விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போட்டு என்னை வெற்றி பெற வைக்க நினைக்கின்றனர்.. இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை..” என்று தெரிவித்தார்..

Source link