விஜய் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு 'அறிவு' படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு

சென்னை,

‘உறியடி’ திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனிக்கப்பட்டவர் விஜய் குமார். தொடர்ந்து, ‘உறியடி 2’ மூலம் நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றார்.சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ படத்திற்கு இவர் வசனம் எழுதியிருந்தார். சில ஆண்டுகள் கழித்து ‘பைட் கிளப்’, ‘எலக்சன்’ திரைப்படங்கள் மூலம் ஆக்சன் நாயகன் ஆனார்

இந்த நிலையில், சத்யசிவா இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றில் விஜய் குமார் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அறிவு என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு டி. இமான் இசையமைக்கிறார். பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால், ‘அறிவு’ திரைப்படம் ஒரு முக்கியமான சமூகச் செய்தியை எடுத்துரைக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் விஜய்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவு படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டப்பட்டு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் குமாருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

Source link