விஜய் குறித்து மமிதா பைஜு பகிர்ந்த சுவாரசிய தகவல்

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜு. `ட்யூட்’ படம் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்ற மமிதா பைஜு, விஜய் நடிப்பில் வெளியாகயுள்ள `ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளார். சூர்யாவுடன் `கருப்பு’, தனுஷுடன் `கர’ படத்திலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ள மமிதா பைஜு, ரசிகர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோருடன் நடித்தது பற்றி தொகுப்பாளர் கேட்டார். அதற்குப் பதிலளித்த அவர், “இது எல்லாம் உடனே உடனே நடப்பது, சில சமயம் கனவு போல ஆக இருக்கிறது. கடவுள் இதை எல்லாம் எனக்கு கொடுப்பதற்கு நன்றி” என்றார்.

விஜய் பற்றி பேசிய மமிதா பைஜு, “விஜய் சார் நேரம் தவறாமல் வருபவர். பேச கொஞ்சம் தயங்குபவர். ஆனால் பழக மிகவும் இனிமையானவர். நாம் சொல்லும் சின்ன விஷயத்தைக்கூட நினைவில் வைத்து சில மாதம் கழித்து சந்திக்கும்போது, அதைப் பற்றி மீண்டும் கேட்பார். எனக்கெல்லாம் 2 நாட்கள் முன்னாள் நடந்ததுகூட நினைவில் இருக்காது. மதிய உணவுக்கு என்றாலே சாலமீன் விரும்பி சாப்பிடுவார். நான் அவரிடம் `என்ன சார் சாலமன் சாப்பிட்டீர்களா?’ எனக் கேட்பேன், அவரும் `ஆமா மா’” என்றார்.

Source link