விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் இணைந்து நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ‘ஃபார்ஸி’ வெப் தொடர். இத்தொடரை ராஜ் & டிகே இருவரும் இணைந்து இயக்கினர். இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்தொடரே ஷாஹித் கபூர் நடித்த முதல் வெப் தொடராகும். இத்தொடரே ஷாஹித் கபூர் நடித்த முதல் வெப் தொடராகும். இத்தொடரில் விஜய் சேதுபதி காவல் அதிகாரியாகவும், ஷாஹித் கபூர் மற்றும் அவரது நண்பரும் கள்ள நோட்டு அடித்து அதனை வியாபாரம் செய்யும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பர்.
நடிகை ராஷி கண்ணா, ரெஜினா மற்றும் புவன் அரோரா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். முதல் சீசன் முடிவில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இடையே சண்டையில் முக்கிய வில்லனான மன்சூர் தலாலை வைத்து முடியும், அடுத்த சீசனுக்கான தொடக்கத்தையும் அங்கு கொடுத்திருப்பர். இத்தொடர் மிகப்பெரிய ஹிட் அடித்ததுடன், பலரிடமும் வரவேற்பைப் பெற்றது. ‘தி பேமிலி மேன்’ தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகேவும் இணைந்து இதனை எழுதி, இயக்கி உள்ளனர்.
இந்த நிலையில், ‘ஃபார்ஸி’ இரண்டாம் பாகத்திற்கான பணிகள் துவங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ராஜ் மற்றும் டிகே தற்போது ‘ராக்த் ப்ரம்மாந்த்’ வெப்தொடரை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
