விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

நடிகர் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா காதல் திருமணம் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்தது. இதில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் கலந்துகொண்டனர்.

திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தள பக்கங்களில் பல மில்லியன்களை தாண்டி சாதனை படைத்தது. திருமண விழாவிற்கு ராஷ்மிகா மந்தனா டோலியில் வரும் காட்சிகளும், விஜய் தேவரகொண்டா வாள் ஏந்திய படியும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது.

இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கர்நாடகா மாநில துணை முதல்வரான டி கே சிவக்குமார், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி, நட்சத்திர தம்பதிகளான சரத்குமார்- ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகர்கள் நாகார்ஜுனா, வெங்கடேஷ், நானி, ராம் சரண், நாக சைதன்யா, இயக்குநர் சுகுமார் போன்ற பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.



Source link