வேண்டுமென்றே இடையூறு செய்வதற்காக ஆம்புலன்ஸ்களை கூட்டத்திற்கு நடுவே அனுப்புகிறார்கள் என தவெக நிர்வாகி நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தச் சட்டம் முன்பே 2016, 2018 மற்றும் 2020 ஆண்டுகளில் மூன்று தடவைகள் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது சுமார் 16,000 அமைப்புகள் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை ஆண்டுதோறும் ₹22,000 கோடி அளவிலான நிதியைப் பெறுகின்றன. இந்த சூழலில் மத்திய அரசு புதிய சட்டதிருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு தவெக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் தவெக இணை பொது செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அளித்த பேட்டியில், “FCRA – வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்ட முன்வரைவு சிறுபான்மை மக்களை பாதிக்கும் விதமாக இருக்கிறது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம். சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் இப்படி பெற்ற நிதியின் மூலமாக தான் தமிழ்நாட்டில் பலரும் கல்வி கற்றனர்.
வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்ட முன்வரைவு
சிறுபான்மை மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு அரசியல் லாபத்துக்காக தான் பாஜக அரசு செய்கிறது. ஒரு சில மாநிலங்களில் கை கொடுக்கும் என்பதற்காக தான் இதை செய்கிறார்கள், இது ஒருபோதும் அவர்களுக்கு கை கொடுக்காது.
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
இன்று திருச்சியில் காவல்துறை மிக சிறப்பாக பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டார்கள். காவல்துறையினர் தான் பொது இடத்தில் தடுப்பு பணிகளை செய்ய முடியும். இதே போல எல்லா மாவட்டங்களிலும் செய்ய வேண்டும். பெரம்பூர், கொளத்தூரில் முறையாக காவல்துறை முறையாக செய்யவில்லை. சரியாக செய்தால் பாராட்டுவோம், செய்யாவிட்டால் கண்டிப்போம் என்று கூறினார்.
பின்தொடர்ந்து வரும் எல்லோருக்கும் விதிமுறைகள் தெரியாது
விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து வரும் எல்லோருக்கும் விதிமுறைகள் தெரியாது. காவல்துறை தான் அதை சரியாக அமல்படுத்த வேண்டும். ஆதவ் அர்ஜுனாவின் பெயரில் உள்ள கார் தான். ஆனால், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பயன்படுத்திய கார். அந்த காரால் காவலர் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது தற்செயலாக நடந்த விபத்து என்று கூறினார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அவருக்கு எங்களால் உதவி செய்ய இயலவில்லை. தேர்தலுக்கு பின்னர் அவருக்கு வேண்டிய உதவி செய்வோம்” என்றார்.தொடர்ந்து விஜய் பரப்புரையில் ஆம்புலஸ் வருவது குறித்த கேள்விக்கு வேண்டுமென்றே இடையூறு செய்யும் நோக்கில், ஆம்புலன்ஸ்களை கூட்டத்தின் நடுவில் அனுப்புகின்றனர் என்று தவெக நிர்வாகி நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விஜய் பிரச்சாரம்
முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக சார்ப்பில் அக்கட்சித் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்காக கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி வேட்பும்னுத்தாக்கல் செய்தார் விஜய் . இதனைத் தொடர்ந்து பெரம்பூர் மற்றும் கொளத்தூரில் பரப்புரை மேற்க் கொண்டார். அப்போது அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதாகவும், காவல்துறையினர் தடைகளை மீறி பரப்புரை மேற்கொண்டதாக கூறி, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
