விஜய் பரப்புரை வாகனத்தில் அதிகாரிகள் சோதனை

சிவகங்கை அருகே விஜய் வந்த வாகனத்தை நிறுத்தி பறக்கும் படை சோதனை நடத்தினர். முன் இருக்கையில் அமர்ந்திருந்த விஜய், எழுந்து நின்று சோதனைக்கு ஒத்துழைப்பு தந்தார்.

காரைக்குடியில் விஜய் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென் மாவட்டங்களில் தனது கட்சியை வலுப்படுத்தும் வகையிலும், வேட்பாளர்களை ஆதரித்தும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தன்னுடைய பிரச்சாரத்தை நிறைவு செய்த விஜய், இன்று ஏப்ரல் 10ஆம் தேதி, காரைக்குடி, சிவகங்கையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக காவல்துறையினர் தரப்பில் 30 நிபந்தனை விதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மதுரையில் இருந்து… சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தார் தவெக தலைவர் விஜய். பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தன்னுடைய பிரச்சார வாகனத்தில் காரைக்குடி சென்றார். சாலையின் வழி நெடுகிலும் விஜய்க்கு தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேர்தல் பறக்கும் படை சோதனை சிவகங்கை மாவட்டத்தின் எஸ்.எஸ் கோட்டை என்னும் இடத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர்.பிரச்சார வாகனத்தில் பணம் மற்றும் மக்களுக்கு வழங்க பரிசுப்பொருள் ஏதேனும் இருக்கிறதா? என சோதனையிட்டனர். எதுவும் இல்லாத நிலையில், வாகனத்திற்கு அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

             

Source link