விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… ஏப்ரல் இறுதி வாரத்தில் 'ஜனநாயகன்' ரிலீஸ்?

சென்னை,

சினிமாத் துறையில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்குள் நுழைந்தவர், நடிகர் விஜய். அவரது நடிப்பில் கடைசி படமான ‘ஜனநாயகன்’, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், சென்சார் குழு சான்றிதழ் வழங்க மறுத்ததால் ரிலீஸில் தாமதமானது. இதையடுத்து, படக்குழு நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில் மீண்டும் சென்சார் குழுவிடம் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்பட்டது.

தற்போது, படம் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் ஆய்விற்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், தேர்தலுக்கு முன்பாக படம் வெளியாகுமா என்ற சந்தோகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையில், படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் தொடர்பான வசனங்கள் ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பத்திரிகையாளர்களாக வரும் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோர் இடம்பெறும் காட்சிகளில் உள்ள சில வசனங்களை மறுஆய்வுக் குழு நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, வருகிற ஏப்ரல் 24ந் தேதி அல்லது ஏப்ரல் 30ம் தேதியில் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link