விஜய பிரபாகரனின் சொத்து மதிப்பு ரூ.28 கோடி..! ஆனால் கடன் இத்தனை கோடியா..? வேட்பு மனு விவரம்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழ்நாட்டில் வரும் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

இந்த சூழலில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.. இதுவரை சுமார் 4100 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.. கடைசி நாளான இன்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அமைச்சர் துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மனு தாக்கல் செய்தனர்..

மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் காந்தி, தமிழிசை சௌந்தராஜன், விஜய பிரபாகரன் உள்ளிட்டோரும் விருத்தாலத்தில் பிரேமலதா தர்மபுரியில் சவுமியா அன்புமணி ஆகியோரும் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்..

இந்த தேர்தலில் தேமுதிக திமுக கூட்டணியில் முதன்முறையாக இணைந்துள்ளது.. தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.. விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் களம் காண்கிறார்..

இந்த நிலையில் விருதுநகர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. தற்போது அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி அவரின் சொத்துமதிப்பு ரூ.28 கோடி என்று அவரின் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய பிரபாகரனுக்கு ரூ.41.51 கோடி கடன் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய பிரபாகரனின் அசையும் சொத்து ரூ. 19.70 கோடி எனவும் அசையா சொத்து ரூ.9 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : Flash : 2 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் மாற்றம்..! விஜய் அதிரடி முடிவு..!

Source link