பெங்களூரு,
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக மீண்டும் விராட் கோலி களமிறங்க உள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த அவர், வரும் ஐபிஎல் தொடரில் அந்த கோப்பையை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் களமிறங்க உள்ளார்.
இந்த நிலையில், தனது ஆல்-டைம் சிறந்த ஆர்சிபி அணியை விராட் கோலி தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் தன்னை (கோலி) தேர்வு செய்தார். மூன்றாவது இடத்தில் தென் ஆப்பிரிக்க முன்னாள் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இடம் பெற்றுள்ளார்.
நான்காவது இடத்தில் கே.எல் ராகுல், ஐந்தாவது இடத்தில் ரஜத் பட்டிதார், ஆறாவது இடத்தில் தினேஷ் கார்த்திக் ஆகியோரை தேர்வு செய்தார். பந்துவீச்சாளர்களாக ஹர்சல் பட்டேல், அனில் கும்ப்ளே, மிட்செல் ஸ்டார்க், டேல் ஸ்டெய்ன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
விராட் கோலியின் ஆல்-டைம் ஆர்சிபி அணி:
கிறிஸ் கெயில், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கே.எல்.ராகுல், ரஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல், அனில் கும்ப்ளே, மிட்செல் ஸ்டார்க், டேல் ஸ்டெய்ன், யுஸ்வேந்திர சாஹல்.
