விரைவில் திருமணமா? நடிகை திரிஷா விளக்கம்

திருமணம் குறித்தும், திரைப்படங்களில் இருந்து விலகுவது குறித்தும் நடிகை திரிஷா விளக்கம் அளித்துள்ளார்.

பரவி வரும் தகவல்நடிகை திரிஷா, சினிமாவிலிருந்து விலகப் போவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் அவரது ரசிகர்கள், ரசிகைகள் சோகம் அடைந்தனர். இப்படி தொடர்ந்து பரவும் தகவல்களுக்கு அவர் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். இதன் காரணமாக அனைத்தும் உண்மை தானோ? என்ற எண்ணமும் எழுந்தது. இந்நிலையில் அத்தனைக்கும் மௌனம் கலைத்திருக்கிறார் திரிஷா.

தலைப்புச்செய்தியான திரிஷா நடிகை திரிஷா தான் கடந்த சில நாட்களாவே தமிழ் சினிமாவின் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார், பேசு பொருளாகி வருகிறார். விஜய் இன்னொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார், எனவே தனக்கு அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்த சில நாட்களிலேயே விஜய் உடன் ஜோடியாக திருமணத்துக்கு வந்திறங்கினார் திரிஷா. எனவே, இரண்டு பேருக்கும் தொடர்பு இருப்பது உண்மைதான் போல என்று பலரும் பேச தொடங்கி விட்டார்கள்.

கேள்வியில் இருந்து தப்பித்த திரிஷா இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே திரிஷா மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்தார். அப்போது விஜய் உடன் ஒன்றாக திருமணத்துக்கு சென்றது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் கூலாக அமைதியுடன், திரிஷா கடந்து சென்றுவிட்டார். அதற்கு பிறகும் இதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் திரிஷா கூறவில்லை.

திரிஷாவுக்கு திருமணமா?இந்த நிலையில் தான், நடிகை திரிஷா விரைவில் சினிமாவிலிருந்து விலகப் போகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் போட்டுவிட்டார்கள். கருப்பு, விஸ்வம்பரா ஆகிய இரண்டு படங்கள்தான் கடைசி படம் என்றும் சில நாட்களாக பேசப்பட்டது. அரசியல் பிரவேசம் செய்யவிருக்கிறார் என்றும் சினிமாவிலிருந்து விலகினால்தான் அரசியலில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என்பதால் திரிஷா இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் பேசப்பட்டது.

உண்மை தானோ? ரசிகர்கள் போஸ்ட் திரிஷாவின் அமைதியை பார்த்த ரசிகர்களோ, தகவல்கள் எல்லாம் உண்மைதான், அதனால் தான் திரிஷா அமைதியாக இருக்கிறார் என்றும் பேச தொடங்கி விட்டார்கள். 20 வருட திரை பயணம் முடிவுக்கு வருகிறது என எமோஷனலாக போஸ்ட் போட்டிருந்தார்கள். எந்த கட்சிக்கு போக போகிறார் என்றும் கூட விவாதித்தார்கள். இந்நிலையில் இதுகுறித்து மௌனம் கலைத்திருக்கிறார் திரிஷா.

இன்றைக்கான கற்பனை கதை கோட்டா முடிந்துவிட்டதா? இந்த நிலையில், நடிகை திரிஷா வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;நான் சினிமாவை விட்டு விலகி விட்டேனாம். ஒரு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டேனாம்.

நேற்றிலிருந்து இரண்டு குழந்தைகளையும் நான் வளர்த்துக்கொண்டு இருக்கிறேனாம். இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா? இல்லை இன்றைக்கான கற்பனை கதை கோட்டா முடிந்துவிட்டதா?

இவ்வாறு கேள்வி எழுப்பி நடிகை திரிஷா பதிவிட்டிருக்கிறார்.

Source link