வில்லிவாக்கத்தில் தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் வீசப்பட்ட மது பாட்டிலால் பரபரப்பு

சென்னை,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. நடிகர் விஜய்யின் தவெக தனித்து போட்டியிடுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.நேற்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பெரம்பூர் தொகுதியில் தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார்.

இந்தநிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா பொதுச் செயலாளர் (தேர்தல் மேலாண்மை)அயனாவரம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்து வருகிறார்.

பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மது பாட்டில் ஒன்று கூட்டத்திற்கு நடுவே வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உடனடியாக காவல்துறை விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை நான் இங்கிருந்து புறப்பட மாட்டேன் என ஆதவ் அர்ஜுனா மேடையில் பேசியதால் சற்று பரபரப்பாக காணப்பட்டது.

Source link