சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் நாளை தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தவெக தலைவர் விஜய் பரப்புரை பயணம்
அந்த வரிசையில் முதன் முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். அதன்படி, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட உள்ளார். அதற்காக கடந்த 30 ஆம் தேதி வேட்புமனுத் தாக்களையும் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கத்தில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
அதன்படி பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பிரச்சாரத்தை விஜய் முன்னெடுத்தார். அப்போது ,அப்போது மக்கள் கூட்டம் அதிகரித்து கட்டுப்பாட்டை மீறியதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு இருந்தவர்களின் பாதுகாப்பு பாதிக்கப்படலாம் என எண்ணிய விஜய் தனது பிரச்சாரத்தை முழுமையாக தொடராமல் குறுகிய நேரத்திலேயே முடித்து விட்டு சென்றார். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி விஜய் பரப்புரைக்கு தடை விதிக்கப்பட்டது மேலும் ஐந்து பிரிவுகளின் கீழ் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொளத்தூரில் பாதுக்காப்பு குறைப்பாடு?
அப்போது கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கொளத்தூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் தலைவர் விஜய் பரப்புரையை சீக்கிரமாக முடித்துக் கொண்டார். காவல்துறை மெத்தனமான முறையில் செயல்படுவதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் நாளை விஜய் பரப்புரைக்கு அனுமதி கேட்டு காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. விஜய் சார்பில் நாளை வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், டி நகர் ஆகிய நான்கு தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டு உள்ள நிலையில், தற்போது வரை அனுமதி கிடைக்காத நிலை இருந்து வந்தது.
வில்லிவாக்கம் பரப்புரை அனுமதி
காவல்துறை தரப்பில் வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட சிட்கோ நகரில் மட்டும் பேசுவதற்கும் மற்ற இடங்களில் பேச அனுமதி வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகின. குறிப்பாக, தி நகரில் விஜய் வருகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் .எனவே அனுமதி வழங்க முடியாத நிலை உள்ளது என காவல்துறை தரப்பில் தகவல் வெளியானது.
அதே சமயம் நான்கு இடங்களிலும் அனுமதி வேண்டும் என தொடர்ந்து தவெக மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதியில் பரப்புரை செய்ய மதியம் 12 மணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிட்கோ நகரில் விஜய் பரப்புரை செய்து கொள்ள ஒரு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
