விளவங்கோடு தொகுதி: பாஜகவில் சீட் கிடைத்ததும் சபதம் எடுத்த விஜயதரணி- சிக்கலில் காங்கிரஸ்! – vilavancode constituency for bjp vijayadharani secures the seat

எம்எல்ஏவாக இருந்த நிலையிலேயே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து பணியாற்றி வந்த விஜயதாரணிக்கு விளங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜயதாரணி(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே நான்காம் தேதி நடைபெறும். இந்த தேர்தலில் ஓர் ஆண்டுக்கு முன்பே அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டிருக்கிறது. அந்த வகையில், இந்த கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. வேட்புமனுத் தாக்கள் செய்ய இன்னும் சில நாட்களை உள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

குறிப்பாக அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து பாஜக முக்கிய புள்ளிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதாகவும், அப்போது அண்ணாமலை பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் அதே தொகுதியில் வானதி சீனிவாசன் களமிறக்கப்பட்டுள்ளதால் பாஜகவில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதமானதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?

இந்த நிலையில் இன்று பாஜக தனது வேட்பாளர் பட்டியலை அதிகாரம் பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், எல். முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்த வரிசையில், முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த விஜயதாரணி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழ் தாய் வாழ்த்து எழுதிய கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தி ஆவார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு காங்கிரஸ் மகளிர் அணியின் பொதுச் செயலாளராகவும், கர்நாடக மாநில பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் விஜயதாரணி அரசியலில் அனுபவம் மிக்க தலைவராக இருந்தாலும் மாநில அரசியலை விட தேசிய அரசியலுக்கு செல்லும் ஆர்வம் அதிகமாக கொண்டிருந்தார்.
இதற்காக நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு கோரியிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த வாய்ப்பு மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ வசந்த் மகன் விஜய் வசந்த்துக்கு சென்றது. இதனால் வாய்ப்பு கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

சபதம் எடுத்த விஜயதரணி

நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக தரப்பில் எந்த ஒரு பதவியும் வழங்கவில்லை. இதனால் சில காலம் எந்த பதவியும் இல்லாமல் பாஜகவில் இருந்து வந்தார். தற்பொழுது வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அங்கு இறுதி வேட்பாளர் யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மொத்தத்தில் விஜயதாரணியம் இந்த அரசியல் மாற்று மற்றும் தற்போதைய வாய்ப்பு அவரது அரசியல் பயணத்தில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து விஜய தாரணி கூறுகையில்: விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றி வாய்ப்பிற்கான சாத்திய கூறுகள் 100% இருப்பதாக நான் பார்க்கிறேன். விளவங்கோடு தொகுதியை பொருத்தவரை நான் நான்காவது முறையாக போட்டு இருக்கிறேன்.
இந்த தொகுதியை பொறுத்தவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக எண்ணற்ற நலத்திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறனேன். எல்லா மொழியும் தனக்கு ஆதரவாக இருந்த மக்கள் இந்த முறை பாஜக சார்பில் போட்டியிட உள்ளேன் அவர்கள் நிச்சயம் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள். களம் என்பது நன்றாக இருக்கிறது. பாஜகவுக்கும் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார்.