விளைச்சல் அதிகரிப்பு: நெல்லையில் தக்காளி விலை குறைந்தது

நெல்லை,

மேற்காசிய போர் பதற்றத்தால் இந்தியாவில் வணிக சிலிண்டர் தட்டுப் பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஓட்டல்களில் வடை, அவியல், பொறி யல் போன்றவை குறைக்கப்பட்டு உள்ளது.

சாலையோர டீக்கடைகளில் வெங்காய வடை, சட்னி போன்றவையும் விற் பனை நிறுத்தப்பட்டு உள்ளது. பல கடைகள் மூடப்பட்டு விட்டன. இத னால் தக்காளி, பல்லாரி போன்றவற்றின் விலை குறைந்துள்ளது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகம் உள்ளதால் நெல்லை டவுன் நயினார் குளம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது.

கிலோ ரூ.10

அதே நேரத்தில் தக்காளி நுகர்வு குறைந்துள்ளது. பொதுமக்கள் மட்டும் அத்தியாவசிய தேவைக்கு வாங்கி செல்கிறார்கள். இதனால் நேற்று தக் காளி கிலோ ரூ.10-ஆக குறைந்தது. முதல் தரம் ரூ.15-க்கு விற்பனை ஆனது. பல்லாரி விலையும் கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது.

Source link