விழுப்புரத்தில் திமுக, தவெக வேட்பாளர்கள் உள்பட 260 பேர் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட டாக்டர் பொன்.கவுதமசிகாமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவருக்கு கண்டாச்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய அனுமதி பெறாமல் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக வேட்பாளர் பொன்.கவுதமசிகாமணி உள்பட 100 பேர் மீது கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மோகன்ராஜ் அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் அக்கட்சியினர் விழுப்புரம் பானாம்பட்டு பாதை, நான்குமுனை சந்திப்பு அருகில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்ததாக அக்கட்சியின் வேட்பாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட 160 பேர் மீது விழுப்புரம் நகரம், மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Source link