விவாகரத்து முடியும் முன்பே ஒரே நிற ஆடையில் வெளியில் சென்றால் இந்த உலகம் ஏற்குமா? – ஆர்த்தி கேள்வி

நடிகர் ரவிமோகன் மற்றும் ஆர்த்திக்கு கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தன் மனைவியை பிரிவதாக ரவிமோகன் தெரிவித்தார். ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி ரவி மோகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இருவரும் தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆர்த்தி தனது சமூக வலைதளங பக்கங்களில் ரவி மோகனின் பெயரை நீக்காமல் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தனர். நீதிமன்றம் அதற்கு தடை விதித்திருந்தது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழா ஒன்றில் நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷா உடன் கலந்துகொண்டார். இருவரும் ஒரே நிற ஆடையில் கலந்துகொண்ட வீடியோ வெளியாகி வைரலானது.

ரவி மோகன் – கெனிஷா ஒன்றாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அண்மையில் மகளிர் தினத்தை முன்னிட்டு, வெளியிட்ட வீடியோவில், “அதிகமாக பாதிக்கப்படுவது ஆண்கள்தான். ஒரு நாள் உங்களுக்கு என்னை புரியும். தயவு செய்து என்னை வாழ விடுங்கள்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக ஆர்த்தி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “விவாகரத்து முடியும் முன்பே ஆர்த்தி வேறொரு ஆணுடன், ஒரே நிற ஆடையில் வெளியில் சென்றால் இந்த உலகம் ஏற்குமா? – அப்படி செய்த பின், நான் பாதிக்கப்பட்டவள் என்று சென்னால் இந்த உலகம் ஏற்குமா? – இல்லை தானே? அப்படியென்றால் இதை செய்த பின்பு, தான் பாதிக்கப்பட்டவர் என்ற சொல்லும் ஆண் மீதும் கேள்வி எழுப்பப்பட வேண்டும். இது ஒரு கொடூரமான சுபாவம்” என்ற பதிவை ஆர்த்தி பகிர்ந்துள்ளார்.



Source link