வீட்டில் இருந்த நகையை காதலனுக்கு கொடுத்த மாணவி.. திருப்பி கேட்டதால் தாய் நேர்ந்த விபரீதம்

நாகர்கோவில்,

நாகர்கோவில் பிள்ளையார்புரம் அன்னம்வலை கம்பெனி தெரு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மனைவி கலாவதி (வயது 42). முறுக்கு வியாபாரியான இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகள் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் வாலிபரை காதலித்துள்ளார்.

இந்த நிலையில் கலாவதி மகள்களின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகளில் 10 பவுன் நகைகள் திடீரென மாயமானது. இது குறித்து 2-வது மகளிடம் கேட்டபோது அவர் தனது காதலன் அவசர தேவைக்காக பணம் கேட்டதால், நகைகளை கொடுத்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலாவதி, நகைகளை கேட்டு மகளிடம் தகராறு செய்தார். இதனால் தாய், மகளுக்கு இடையே தகராறு நடந்தது.

இதற்கிடையே நேற்று மாணவியின் வீட்டுக்கு காதலன் வந்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் உருட்டு கட்டையால் கலாவதியின் பின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார். உடனே காதலன் மற்றும் மாணவி இருவரும் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொல்ல முயன்றனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்த னர். அங்கு கலாவதி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச் சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கலாவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் மாணவி மற்றும் அவரது காதலன் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Source link