கொல்கத்தா,
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. கடந்த 1-ந்தேதி அவர்களுடைய ஆட்டம் முடிவடைந் தது. இதைத் தொடர்ந்து அவர்கள் துபாய் வழியாக தாயகம் திரும்ப திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டதால் அவர்களால் உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை. 4 நாட்களுக்கு மேலாக இந்தியாவிலேயே தங்கியிருந்தனர். ‘நாங்கள் நாடு திரும்ப வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங் கள். குறைந்தது நிலவரத்தையாவது சொல்லுங்கள்’ என அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் சேமி சமூக வலைதளம் மூலம் கேட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவர்கள் தனி விமானத்தில் வெஸ்ட் இண்டீஸ் செல்வ தற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்பாடு செய்துள்ளது.இதே போல் ஜிம்பாப்வே அணியில் ஒரு குழுவினர் மாற்று ஏற்பாடாக எத் யோப்பியாவின் அடிஸ் அபாபா வழியாக நேற்று ஹராரே புறப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் இன்று கிளம்புகிறார்கள்.
