தவெக சார்பில் போட்டியிடும் வேட்பளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் விஜய் உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த சூழலில்தான் தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர் உத்தேச பட்டியல் வெளியாயிருக்கிறது. ஏற்கனவே திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
குறிப்பாக திமுக கூட்டணியில் சலசலப்பு நீடித்த போதும் கூட்டணியை இறுதி செய்து எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதி மற்றும் எந்தெந்த தொகுதி என திமுக தேர்தல் குழு இறுதி செய்திருக்கிறது. நேற்று மாலை திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில்தான் தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர் உத்தேச பட்டியல் வெளியாயிருக்கிறது. ஏற்கனவே திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
குறிப்பாக திமுக கூட்டணியில் சலசலப்பு நீடித்த போதும் கூட்டணியை இறுதி செய்து எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதி மற்றும் எந்தெந்த தொகுதி என திமுக தேர்தல் குழு இறுதி செய்திருக்கிறது. நேற்று மாலை திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை மு.க ஸ்டாலின்அறிவித்தார். அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில்தான், தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார். அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டிருந்தார். விஜய் பெரம்பூர் மற்றும் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார்.
தவெக -வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எங்கு போட்டியிடுவர் என்ற பட்டியல்:
தியாகராயர் நகர் – புஸ்ஸி ஆனந்த்
மயிலாப்பூர் – வெங்கட்ராமன்
வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜுனா
கோபி – செங்கோட்டையன்
திருப்பரங்குன்றம் – நிர்மல் குமார்
திருச்செங்கோடு – அருண்ராஜ்
வேட்பாளர் அறிமுகத்திற்கு பின்னர் பேசிய விஜய்,
“இந்தக் கூட்டத்தை வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் என்று குறிப்பிட்டார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை இது நம் மக்களுக்கான ‘காப்பாளர்’களை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்வாகும். அவ்வாறுதான் இதனை நான் கருதுகிறேன் என பேசினார்.
அனுபவமில்லை என்ற விமர்சனம்
நம் கட்சியினருக்குத்தேர்தலை எதிர்கொள்ளும் அனுபவம் இல்லை என்று சிலர் விமர்சிக்கிறார்கள். நம்முடைய வேட்பாளர்கள் அனைவரும் மிகச்சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்றும், அவர்களுக்குப் பெரிய அளவில் பின்புலம் இல்லை என்றும் கூறுகிறார்கள் என்றார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி குறித்து எழும் கருத்துகள்
தொடர்ந்து பேசிய அவர், “அனைவருக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு சட்டமன்ற உறுப்பினர் (MLA) என்பவர் எப்படி இருக்க வேண்டும்? சட்டமன்ற உறுப்பினர் என்பவர் வெறும் அனுபவத்தை மட்டும் வைத்துக்கொண்டு கொள்ளையடிப்பவராக இருக்கக் கூடாது. சட்டவிரோதமான கல் குவாரிகளில் ஈடுபடுபவராக இருக்கக் கூடாது. கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களைத் தரக்குறைவாகத் தாக்குபவராக இருக்கக் கூடாது” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்னும் வெளிப்படையாகச் சொல்லப்போனால், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது கொள்ளை வழக்கு, போதைப்பொருள் கடத்தல் வழக்கு மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. திருட்டு வழக்கில் சிறை சென்று வந்த ஒருவரும் அங்கு உள்ளார். அவர் யார் என்று நீங்கள் யோசிக்கலாம். அந்த சட்டமன்ற உறுப்பினரை யாருக்கு எதிராகத் திமுக தேர்தலில் நிறுத்தியது தெரியுமா? இன்று அவர்களின் கூட்டணியிலேயே மிக முக்கியத் தலைவராக இருப்பவருக்கு எதிராக, அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் 1996-ஆம் ஆண்டு அந்த சட்டமன்ற உறுப்பினரை நிறுத்தினார்கள். மரியாதையின் நிமித்தமாக அந்தத் தலைவரின் பெயரை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை” எனவும் பேசியிருந்தார்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் வெறும் பிரதிநிதிகள் அல்ல; அவர்கள் அந்தத் தொகுதியின், அந்த மக்களின் ‘எல்லைக் காப்பாளர்கள்’. அவ்வாறுதான் அவர்கள் இருக்க வேண்டும். களத்தில் மக்களோடு மக்களாக நிற்கும் நபர்களையே நான் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். என்னால் ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது என்பதால், என் சார்பாக, எனது பிரதிநிதிகளாக இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். நம்முடைய அக்கா, தங்கை, அண்ணன் மற்றும் தம்பிகளாகிய இவர்களை இன்று உங்களிடம் ஒப்படைக்கிறேன். இவர்களைச் சட்டமன்ற உறுப்பினர்களாக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.
தேர்தல் மற்றும் கூட்டணி குறித்த பார்வை:
தொடர்ந்து பேசிய அவர், கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் உங்கள் உற்சாகம் குறையவில்லை. ‘விஜய்க்கு என்ன செல்வாக்கு இருக்கிறது? கூட்டத்தை வைத்துச் சொல்கிறீர்களா? இது வெறும் வேடிக்கை பார்க்க வரும் கூட்டம்’ என்று வன்மத்துடன் கேள்வி கேட்பவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்கிறேன்.
“இந்தத் தேர்தல் மற்றவர்கள் கூறுவது போன்ற சாதாரணத் தேர்தல் அல்ல. இது ஒரு இருமுனைப் போட்டி. மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் அவர்களின் கூட்டணிக்கும் இடையிலானப் போட்டி இது. அது என்ன மக்கள் நலக் கூட்டணியா? அனைத்துப் பழைய முகங்களும் அங்குதான் உள்ளனர். தேர்தல் முடிவு என்னவாகும் என்று தெரிந்த காரணத்தாலோ என்னவோ, அவர் பழைய பெயரிலேயே அக்கூட்டணியை மாற்றிக்கொண்டார் என நினைக்கிறேன். உடைந்த கண்ணாடியை ஒட்டியது போலவும், கிழிந்த துணியைத் தைத்து வைத்தது போலவும் இருக்கும் ஒரு ஒட்டுப்போட்ட கூட்டணி அது” என விமர்சித்திருந்தார்.
நம்பி அரசியலுக்கு வந்தேன்:
மேலும் அவர் பேசுகையில்,”உங்களை நம்பி அரசியலுக்கு வந்த எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். ஏப்ரல் 23-ஆம் தேதி அதிகாலையிலேயே தயாராகி, ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களியுங்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். வசதியான வாழ்க்கையைத் துறந்து உங்களுக்காக மட்டுமே நான் வந்துள்ளேன். ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டேன். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் அவர்கள் வேண்டுமா? அல்லது மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என அவர் பேசியிருந்தார்.
