வேட்பாளர்கள் சோசியல் மீடியா தரவுகளை தரணும்.. தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு! – candidates must submit their social media data – election commission issues a strict order

தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்கள் சமூக வலைதள தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tamil Nadu Election 2026(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தேர்தலை அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 -ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிற மே நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம், தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து தமிழகத்தில் நடத்தை விதிமுறைகள் அமலாகி இருக்கின்றன. மேலும் வேட்பாளர்களுக்கான சிறப்பு வழிமுறைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

வேட்பாளர்கள் சமூக வலைதள தரவுகளை தர வேண்டும்

அந்த வகையில் ஏப்ரல் ஆறாம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான் வேட்பாளர்களுக்கான நடைமுறைகளை தெளிவுபடுத்தி தேர்தல் ஆணையம் அறிவிப்பு போன்ற வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் வேட்பாளர்கள் தங்களின் சமூக வலைதள விவரங்களை தர வேண்டும் எனவும் அதில் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மேலும் அந்த அறிக்கையில் இணையதளங்கள் சமூக வலைதளங்களில் அனுமதி சான்றிதழ் இல்லாமல் அரசியல் விளம்பரங்களை பதிவிடக்கூடாது என குறிப்பிட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின், இணையதளங்கள் உட்பட எந்த ஒரு விளம்பரங்களும் அனுமதி சான்றிதழ் இன்றி வெளியிடப்படக்கூடாது என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறது. மேலும் ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட தொடர்புடைய வேட்பாளர் அல்லது கட்சி தலைமையிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் வேட்பாளர்கள் தங்களின் சமூக வலைதள கணக்கு விவரங்களை வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வழங்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

பொது நடத்தை விதிகள்

தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பொது நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. சாதி, மத அல்லது சமூக மொழி ரீதியான பிரச்சினைகளை தேர்தல் சமயத்தில் உருவாக்கவோ அதிகப்படுத்தவோ வேட்பாளர்கள் முயலக் கூடாது என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் பிற அரசியல் கட்சிகளை கொள்கை திட்டங்கள் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து விமர்சிக்க கூடாது எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்திருக்கிறது. தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகளின் சுவர்களிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அறிக்கைகள் பதாகைகள் விளம்பரங்களை ஒட்டும்போது அந்த இடத்தின் உரிமையாளரிடம் முன் அனுமதி பெற்று இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறது. ஒரு கட்சியை சேர்ந்த நபர்கள் வேறு கட்சி நடத்தும் கூட்டங்களில் கேள்வி எழுப்புவதோ அல்லது துண்டறிக்கைகளை விநியோகம் செய்வதோ அவர்களின் பிரச்சாரத்தை தொந்தரவு செய்யும் வகையிலாக செயல்படக் கூடாது எனவும் எச்சரித்து இருக்கிறது.
தேர்தல் சமயங்களில் வீதி பிரச்சாரங்கள் நடைபெறும் என்பதால் தனிமனிதரின் வாழ்வோ இல்லை நடைமுறையோ பாதிக்காத அளவிற்கு செயல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் லஞ்சம் கொடுப்பது வாக்காளர்களை மொழி, இன, சாதிய ரீதியிலாக தூண்டுவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவித்திருக்கிறது.
மேலும், வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் வாக்கு சேகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் இது போன்ற செயல்கள் ஊழல் நடவடிக்கைகளாக கருதப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 5 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றனர்.

தற்போது வரை தமிழக அரசியல் களத்தில் நான்குமுனை போட்டி என்ற சூழல் நிலவுவதால் தேர்தல் சார்ந்த முடிவுகள் கணிக்க முடியாததாக மாறி இருக்கிறது. மேலும் இந்த தேர்தல் மிக முக்கியமான ஒரு தேர்தலாக அனைத்து தரப்பினராலும் கவனிக்கப்பட உள்ளது.