தமிழக சட்டமன்ற தேர்தல் இம்மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளது. இந்த நிலையில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்பட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. கடந்த 30-ம் தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கி பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக, காங்கிரசு வேட்பாளர்கள் அறிவிக்காமல் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. , தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து டில்லியில் பியூஷ் கோயல் தலைமையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இறுதிப் பட்டியலுடன் பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வரவிருப்பதாகவும், மாநில நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, இன்று இரவு அல்லது நாளைக்குள் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பிலும் இழுபறி நீடித்து வருகிறது. மேலும், வேட்பாளர்கள் பட்டியல் குறித்து தில்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனைக் குழு கூட்டம் வியாழக்கிழமை (ஏப். 2) நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களுடன் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், “மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
இதில் 85 விழுக்காடு தொகுதிகளில் வேட்பாளர்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள். எஞ்சிய 15% இன்னும் ஓரிரு மணி நேரத்தில் முடிவு செய்யப்படும். இன்று காலையோ அல்லது நாளை காலையோ முழு வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும். செல்வப்பெருந்தகை கூறினார்.
பாஜக நிர்வாகி நீக்கம்: நயினார் நாகேந்திரன்
வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில், இரண்டு முக்கிய கட்சிகளும் வேட்பாளர்களை இறுதி செய்யாமல் இழுபறி நீடித்து வருவது அக்கட்சி தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக வேட்பாளரை அறிவிக்காத நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்த அம்மாவட்ட பாஜக தெற்கு மாவட்ட துணை தலைவர் முரளிதரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

