ஸ்கெட்ச் போட்டது டிரம்ப் இல்லை; நான் தான்… உண்மையை வெளிப்படுத்திய அமெரிக்க மந்திரி

வாஷிங்டன் டி.சி.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து 4 நாட்களாக நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், இந்திய பெருங்கடலில் இருந்த ஈரான் போர்க்கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று கடலுக்கு உள்ளே இருந்து குண்டுவீசி கடுமையாக தாக்கியது. இதில் அந்த கப்பல் பல துண்டுகளாக உடைந்தும், வெடித்து சிதறியும், தீப்பற்றி எரிந்தும் போனது. அந்த கப்பலை, அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Also Read
ஈரானின் வான்வெளியை முழுமையாக கைப்பற்றுவோம்: அமெரிக்கா அறிவிப்பு

ஸ்கெட்ச் போட்டது டிரம்ப் இல்லை; நான் தான்... உண்மையை வெளிப்படுத்திய அமெரிக்க மந்திரி

இந்த நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத் இன்று கூறும்போது, அமெரிக்க மக்கள் சார்பாக குறிப்பிடத்தக்க விசயங்களை செய்து முடிக்க வேண்டும் என்பது டிரம்ப்பின் விருப்பம். அதற்கு மேல் நாங்கள் எதுவும் கூறுவதற்கில்லை என்றார்.

எனினும் தொடர்ந்து பேசும்போது, டிரம்ப்பை கொலை செய்யும் முயற்சிக்கான நோக்கங்களை ஈரான் கொண்டுள்ளது என நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே எங்களுக்கு தெரியும். உண்மையில், ஜனாதிபதி டிரம்ப் கூட இதனை பற்றி பேசவில்லை. ஆனால், இதற்கு யார் காரணமோ அவர்களை இலக்கிற்கான பட்டியலில் கொண்டு வருவேன் என நான் உறுதி செய்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு, ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதனை நினைவுபடுத்தும் வகையில், ஈரான் தலைமை பேசியிருந்தது. டிரம்ப்பை நாங்கள் இந்த முறை கொலையில் இருந்து தப்ப விடமாட்டோம் என்ற வகையில் பேசியது. இதனால், டிரம்ப்புக்கு எதிரான ஈரானின் நிலைப்பாட்டை தொடர்ந்தே, ஈரானை தாக்குவது மற்றும் குறிப்பிட்டு அதன் உச்ச தலைவரான காமேனியை படுகொலை செய்வது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத் நேற்று முன்தினம் பேசும்போது, அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம் என கூறி வந்த ஈரான் ஆட்சிக்கு அமெரிக்காவிடம் இருந்து மரணம், இஸ்ரேலிடம் இருந்து மரணம் பரிசளிக்கப்பட்டு உள்ளது.

இது ஆட்சி மாற்றத்திற்கான போர் அல்ல. ஆனால், நிச்சயம் ஆட்சி மாற்றப்பட்டு உள்ளது. அதனால், உலகம் நன்மையடைந்து உள்ளது. போரை நாங்கள் தொடங்கவில்லை. ஜனாதிபதி டிரம்ப் அரசின் கீழ, நாங்கள் அதனை முடித்து வைத்து வருகிறோம். நீங்கள் அமெரிக்கர்களை கொன்றால், பூமியில் எந்த பகுதியில் உள்ள அமெரிக்கர்களையாவது அச்சுறுத்தினால், மன்னிப்போ தயக்கமோ இன்றி உங்களை நாங்கள் வேட்டையாடுவோம். உங்களை கொல்வோம் என்றார்.

Source link