ஸ்பானிஷ் பாரா பேட்மிண்டன் – 2 தங்கம், 1 வெள்ளி வென்று தமிழக வீராங்கனை சாதனை

டோலெடோ,

ஸ்பெயினின் விட்டோரியா-காஸ்டீஸ் நகரில் நடைபெற்ற ஸ்பானிஷ் பாரா பேட்மிண்டன் சர்வதேச தொடரில், தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று பதக்கங்களை வென்று அசத்தினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிறப்பாக விளையாடிய அவர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். தொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்று அசத்தினார். மேலும் பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார்.

Also Read
6 போட்டிகள், 5-ல் தோல்வி…. தோனி இல்லாமல் தொடர்ந்து தடுமாறும் சென்னை சூப்பர் கிங்ஸ்
ஸ்பானிஷ் பாரா பேட்மிண்டன் -  2 தங்கம், 1 வெள்ளி வென்று தமிழக வீராங்கனை சாதனை

முன்னதாக ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வென்றிருந்த துளசிமதி, இப்போது சர்வதேச மேடையிலும் தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறார். இந்த சாதனை தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமையை சேர்த்துள்ளது.

Source link