ஸ்மார்ட் போன் பயன்படுத்துறீங்களா? கூகுள் பிளே ஸ்டோரில் வந்த சூப்பர் அப்டேட்

ஸ்மார்ட் போன்களில் பேட்டரியில் சார்ஜ் விரைவாக தீர்ந்து விடுவதே பலருக்கும் பெரிய தலைவலியாக இருக்கும். இதற்காகவே சிலர் கையில் பவர் பேங்குடன் சுற்றுவதை பார்க்க முடியும். ஸ்மார்ட் போன்களைப் பொறுத்தவரை சில செயலிகள் அதிகப்படியான பவர் யூசேஜ் செய்யும். இதனால், பேட்டரி விரைவில் காலியாகும் நிலை ஏற்படுகிறது.

ஆண்ட்ராய்டு போன்களில் ஸ்கிரீன் ஆப் செய்யப்பட்டிருந்தாலும், ஆடியோ கேட்பது அல்லது லொகேஷன் (இருப்பிடம்) சேவைகளுக்காக சிபியு தொடர்ந்து இயங்க ‘வேக் லாக்’ என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சில செயலிகள் இதைப் தவறாகப் பயன்படுத்துகின்றன. குறிப்பிட்ட செயலியை பயன்படுத்தாமல் விட்டாலும், பேட்டரியை பயன்படுத்துகிறது. இது போன்களில் பேட்டரி விரைவாக தீர்ந்து போகச் செய்யும்.

எனவே, இதுபோன்ற செயலிகளை இனி டவுன்லோடு செய்யும் முன்பே அறிந்து கொள்ளும் வசதியை பிளே ஸ்டோர் கொண்டு வர இருக்கிறது. இதன்படி, கூகுள் பிளே ஸ்டோரில் அதிக பேட்டரியை பயன்படுத்தும் செயலி என்று தனியாக சுட்டிக்காட்டப்படும். அதேபோல பரிந்துரை செயலிகள் பட்டியலிலும் இத்தகைய செயலிகள் இனி காட்டப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28 நாட்களில் 5 சதவீதத்திற்கும் மேலாக இந்த வேக் லாக் செயல்பாட்டில் இருந்தால், அந்த செயலியை இந்த லிஸ்டில் ஆண்ட்ராய்டு கொண்டு வந்துவிடும்.

Source link