பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி கடந்த 2023-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்திற்கு போதைப்பொருளை அதிக அளவு பயன்படுத்தியதே காரணம் என்பது தெரிய வந்தது
இந்த வழக்கில் மேத்யூ பெர்ரிக்கு போதைப்பொருளை விற்பனை செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான ஜஸ்வீன் சங்கா (வயது 42) உள்பட 5 பேர் மீது கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில் ஜஸ்வீன் சங்காவுக்கு 15 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்வீன் சங்கா, இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தவர்.
அவர் அமெரிக்கா – இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர் ஆவார். கெட்டமைன் ராணி என்று அழைக்கப்படும் ஜஸ்வீன் சங்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். நடிகர் மேத்யூ பெர்ரிக்கு கெட்டமைன் போதைப்பொருளை ஜஸ்வீன் சங்கா, எரிக் பிளெமிங் என்ற நபருடன் இணைந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
