கோடை காலத்தில் அதிகப்படியான பயணிகள் நெரிசலை சமாளிக்க ஹூப்பள்ளி – ராமேஸ்வரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் அறிவித்து உள்ளது.
கோடை காலத்தில் அதிகப்படியான பயணிகள் நெரிசலை சமாளிக்க ஹூப்பள்ளி – ராமேஸ்வரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் அறிவித்து உள்ளது.
ஹூப்பள்ளி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
(Train No. 07355) ஹூப்பள்ளி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சிறப்பு ரயில் ஏப்ரல் மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளிலும், மே மாதம் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளிலும் (ஞாயிற்றுக்கிழமைகள்) அதிகாலை 6.50 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 5.20 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும். மொத்தம் 9 சேவைகள் இயக்கப்படுகின்றன.
ராமேஸ்வரம் – ஹூப்பள்ளி சிறப்பு ரயில்
மறுமார்க்கத்தில் (Train No. 07356) ராமேஸ்வரம் – ஹூப்பள்ளி சிறப்பு ரயில் ஏப்ரல் 6, 13, 20, 27 மற்றும் மே 4, 11, 18, 25, மேலும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகள்) இரவு 8.00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 7.40 மணிக்கு ஹூப்ளியை சென்றடையும். இதுவும் மொத்தம் 9 சேவைகளாக இயக்கப்படும்.
சிறப்பு ரயில்களில் உள்ள வசதிகள்
இந்த ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை, ஸ்லீப்பர், பொது இரண்டாம் வகுப்பு, மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டிற்கான தனி பெட்டி, உணவகம் (பாண்ட்ரி கார்) மற்றும் லக்கேஜ் கம் பிரேக் வான் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
ஹூப்பள்ளி – ராமேஸ்வரம் இடையிலான வழித்தடங்கள்
இந்த ரயில்கள் ஹூப்பள்ளியில் இருந்து புறப்பட்டு ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தாவணகேரே, சிக்கஜஜூர், பிரூர், அர்சிகேரே, திப்தூர், தும்கூர், பனஸ்வாடி, ஹோசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மனமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்தை அடையும்.
முன்பதிவு எப்போது?
பயணிகள் முன்பதிவு வசதி மார்ச் 21 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் திறக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடைக்காலத்தில் அதிகமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் நோக்கி பயணம் செய்வதை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தல்
இந்த சேவை மூலம் தென் இந்தியாவின் பல நகரங்களிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோடைக்கால விடுமுறையில் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இது மிகுந்த உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
