1.31 கோடி மகளிருக்கு ரூ.5,000 வரவு: மனம் நிறைவாக இருக்கிறது – மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை,

போட்டித்தேர்வுகள் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;

இன்று தமிழ்நாட்டுக்கு சூப்பர் மார்னிங். பல தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து 1.31 கோடி மகளிருக்கு ரூ.5000 உரிமைத் தொகை வரவு வைத்துள்ளோம். மனம் நிறைவாக இருக்கிறது.

படிப்பை இறுகப்பிடித்து முன்னேறிய உங்களை பார்க்கும் போது உணர்ச்சிப்பெருக்கில் இருக்கிறேன். பணி நியமன ஆணை உழைப்புக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. எதிர்காலத்துக்கான உத்தரவாதம். டிஎன்பிஎஸ்சி முலம் இதுவரை 45,126 பேர் அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர். தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களை தேடி அரசு ஊழியர்கள் சென்றுள்ளனர்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நீங்களே எனக்கு பக்கபலமாக இருக்கப்போகிறீர்கள். ஆள்வோர் திட்டம் தீட்டினாலும், அதனை கொண்டு சேர்க்கும் பணி உங்களிடமே உள்ளது. தேடி வரும் மக்களின் நம்பிக்கையை நீங்கள் காப்பாற்ற வேண்டும். திராவிட மாடல் அரசு எப்போது உங்களுக்கு துணையாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link