1,100 போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூர் ஆசாமி டெல்லி போலீசாரால் கைது

பெங்களூரு,

கர்நாடகா மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் லேஅவுட் பகுதியை சேர்ந்த சீனிவாஸ் லுயிஸ் என்பவர் லுயிஸ் ஒரு முதுநிலை பட்டதாரி தற்போது இவர் வேலை இல்லாமல் தனது ஒய்வு பெற்ற தாயின்

ஓய்வூதியத்தை வைத்தே அந்த குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அவர் அதிகமாக பேச மாட்டார் எப்போதும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பார் என்றும் தெரிகிறது. அவர் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றம், சட்டசபைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக மின்னஞ்சல்கள் வந்தன. அதில், “அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, இன்னும் சில நிமிடங்களில் வெடிக்கும்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது.

டெல்லி போலீசார் இந்த மிரட்டல் மின்னஞ்சல்களை ஆய்வு செய்தபோது, இரண்டு வார கால தீவிரதொழில்நுட்ப விசாரணைக்கு பிறகு, இந்த மின்னஞ்சல்கள் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து அனுப்பப்படுவதை கண்டுபிடித்தனர். இந்த நிலையில் மைசூர் போலீசாரின் உதவியுடன் டெல்லி போலீசார் அந்த பகுதி விரைந்து வந்தனர்.

போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த லேப்டாப் மற்றும் சிம் கார்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரின் லேப்டாப்பை ஆய்வு செய்ததில் ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1,100 போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பியுள்ளதாக தெரிகிறது. மேலும் லூயிஸ் வேலை கிடைக்காத விரக்தி மற்றும் மன அழுத்தம் காரணமாகவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டெல்லி மட்டுமின்றி, மிரட்டல் மின்னஞ்சல்கள் சென்றடைந்த பெங்களூரு, மும்பை போன்ற முக்கிய நகரங்களிலும் லுயிஸ்க்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினார்.மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

Source link