13 மாவட்டங்களில் பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவு தொடக்கம்: மா.சுப்பிரமணியன்

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, ரூ.7.39 கோடியில் மருத்துவ உபகரணங்களையும், ‘ஜே.எம்.எம்.சி. மெடிசின்’ எனப்படும் மருத்துவ இதழையும் தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

தேசிய அளவில் பார்வை இழப்பு விகிதம் 1.99 சதவீதம். ஆனால் தமிழ்நாட் டில் பார்வை இழப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது. கடந்த 5 ஆண்டு களில் சேலம், திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் பல்நோக்கு நடமா டும் கண் மருத்துவ பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு களில் 97 அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள சிறப்பு கண் சிகிச்சை மையத் தில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 301 கண் புரை அறுவை சிகிச்சைகளும், நட மாடும் கண் மருத்துவப்பிரிவு மூலம் 4,502 முகாம்களும் நடத்தப்பட்டுள் ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Source link