18 வருட ஐபிஎல் – ஒரே போட்டி… இன்னும் உடைக்கப்படாத அனில் கும்ப்ளேவின் சாதனை

பெங்களூரு,

ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28 முதல் தொடங்க உள்ள நிலையில், பழைய சுவாரசிய சாதனைகள் மீண்டும் பேசுபொருளாகி வருகின்றன.

இந்த நிலையில், இந்திய முன்னாள் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே பெயரில் உள்ள ஒரு அபூர்வ சாதனை ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. ஐபிஎல் வரலாற்றில், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணியில் இருந்து ‘மேன் ஆப் தி மேட்ச்’ விருது பெற்ற ஒரே வீரர் கும்ப்ளே தான்.

2009-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டனாக கும்ப்ளே விளையாடினார். அந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொண்ட பெங்களூரு , வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Also Read
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் – இந்திய அணி அறிவிப்பு… 2 புதுமுகங்களுக்கு இடம்
18 வருட ஐபிஎல் - ஒரே போட்டி… இன்னும் உடைக்கப்படாத அனில் கும்ப்ளேவின் சாதனை

முதலில் பேட்டிங் செய்த டெக்கான் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. கும்ப்ளே 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும், 144 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி அதை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.

இருப்பினும் சிறந்த பந்துவீச்சு காரணமாக கும்ப்ளேவுக்கு ‘மேன் ஆப் தி மேட்ச்’ விருது வழங்கப்பட்டது. இதுவரை யாராலும் மீண்டும் செய்யப்படாத அபூர்வ சாதனையாக உள்ளது.

Source link