லாகூர்,
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆஹா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. கேப்டன் சல்மான் ஆஹா (76 ரன்), உஸ்மான் கான் (53 ரன்) அரைசதம் அடித்தனர். அடுத்து அடிய ஆஸ்திரேலிய அணி 15.4 ஓவர்களில் 108 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 90 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது, ஷதப் கான் தலா 3 விக்கெட்டும், உஸ்மான் தாரிக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
