20 கோடி பார்வைகளைக் கடந்த “ஜெயிலர்” பட பாடல்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலித்தது. ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் நல்ல பங்களிப்பைச் செய்தன. ஹுக்கும் பாடலின் பின்னணி இசையே ‘ஜெயிலர்’ காட்சிகளுக்கு பலமாக அமைந்திருந்தது.

இந்த நிலையில், ஹுக்கும் பாடலின் லிரிக்கல் விடியோ யூடியூபில் 20 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. சூப்பர் சுப்பு எழுதிய இப்பாடலை அனிருத் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link