டெக்ரான்,
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடு களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு ஈரான் அணி ஏற்கனவே தகுதி பெற்று ஜி பிரிவில் உள்ளது. அந்த அணிக்குரிய ஆட்டங்கள் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை விளைவித்து வருவதால் அங்கு நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க சாத்தியமில்லை என ஈரான் விளையாட் டுத்துறை மந்திரி அகமத் டோன்யமாலி தெரிவித்தார்.
