2026 ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியானது….சென்னை – பெங்களூரு போட்டி எப்போது ?

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியாகியுள்ளது.அதன்படி 28ம் தேதி நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் 30ம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் சென்னை – பெங்களூரு போட்டி அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது . பெங்களுருவில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

Source link