2026 சட்டமன்ற தேர்தலில் ராமதாஸ் விகே சசிகலா இணைந்து போட்டியிட முடிவு! – ramadoss and vksasikala decide to contest together in the 2026 assembly elections

வருகிற தேர்தலில் ராமதாஸ் தரப்பு பாமக உடன் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி வைத்துள்ளது.

Ramadoss and VKSasikala decide to contest together in the 2026 Assembly elections(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் ராமதாஸ் தரப்பு பாமக இணைந்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

இன்று மாலை தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய வி கே சசிகலா ஒரு மணி நேரம் அவருடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலோசனை முடிந்த பிறகு கூட்டணி ஒப்பந்தத்தில் வி கே சசிகலா மற்றும் நிறுவனர் ராமதாஸ் இருவரும் கையெழுத்துட்டு இருக்கின்றனர்.

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவோம்- ராமதாஸ் உறுதி

ராமதாஸ் மற்றும் சசிகலா கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இணைந்து தேர்தலை சந்திக்கவிருக்கிறது. மேலும் இந்த கூட்டணி குறித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என தெரிவித்திருக்கிறார் மேலும் தமிழ்நாட்டில் இந்த கூட்டணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் அவர் உறுதி அளித்திருக்கிறார். மேலும் இந்த கூட்டணியில் சேர விரும்புவோர் என்னிடமும் அல்லது சசிகலா அம்மையாரிடமும் பேசலாம் எனவும் பாமக நிறுவனர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.