வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது.
இந்த சூழலில்தான் தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர் உத்தேச பட்டியல் வெளியாயிருக்கிறது. ஏற்கனவே திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
குறிப்பாக திமுக கூட்டணியில் சலசலப்பு நீடித்த போதும் கூட்டணியை இறுதி செய்து எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதி மற்றும் எந்தெந்த தொகுதி என திமுக தேர்தல் குழு இறுதி செய்திருக்கிறது. நேற்று மாலை திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழக வெற்றி கழக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்
விஜய் கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தநிலையில் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த கட்சி சார்பில் விருப்ப மனு கொடுக்கப்பட்டவர்களுக்கு நேர்காணலை அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தி முடித்திருக்கிறார். இந்த சூழலில்தான் விஜய் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பெரம்பூரில் பிரச்சாரம் மேற்கொள்ள விஜய் முயன்ற போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மனு அளிப்பதற்காக நேற்று விஜய் தலைமைச் செயலகம் வந்திருந்தார். அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாக இருக்கிறதாக சொல்லப்படுகிறது.
அந்த உத்தேசப்பட்டியலில் பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்டியிடுவார் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் டி.நகர் தொகுதியில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முதுபெரும் அரசியல்வாதி செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அந்த கட்சியின் இணைச் செயலாளர், அருண் ராஜ் – திருச்செங்கோடு தொகுதியிலும், அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி நிர்மல் குமார் திருப்பரங்குன்றத்திலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும் போட்டியிடுவார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் மயிலாப்பூர் தொகுதியில் வெங்கட்ராமன்,எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன்,மாதவரம் தொகுதியில் எம்எல் பிரபு , அம்பத்தூர் தொகுதியில் பாலமுருகன், ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜேசிடி பிரபாகர், ஆர்கே நகர் தொகுதியில் மரிய வில்சன், துறைமுகம் தொகுதியில் அசோக், சோழிங்கநல்லூர் தொகுதியில் ஈ.சி.ஆர் சரவணன், சைதாப்பேட்டை தொகுதியில் அருள்பிரகாசம்,மாதுரவாயல் – ரேவந்த்
திருக்கோவிலூர் – பரணிபாலாஜி
அரியலூர் – சிவா
ஶ்ரீ ரங்கம் – ரமேஷ்
அந்தியூர் – வெங்கடேஷ்
கோவை வடக்கு – சம்பத் குமார்
கரூர் – மதியழகன்
தூத்துக்குடி – ஶ்ரீநாத் (நடிகர்)
திருமங்கலம் – ராஜ்மோகன் வேலா ராமமூர்த்தி
அறந்தாங்கி – பர்வேஸ்
காரைக்குடி – Dr. பிரபு
தஞ்சாவூர் – விஜய் சரவணன்
பொன்னேரி – G. அம்பிகா
சேந்தமங்கலம் – வெங்கடேஷ்
முசிறி – கார்த்திக் K M D அறிவு
ஈரோடு – தமிழ்ச்செல்வி
தென்காசி – ராஜ பிரகாஷ்
பாப்பிரெட்டிப்பட்டி – திலகவதி
வாணியம்பாடி – சையது
மேட்டுப்பாளையம் – சுனில் ஆனந்த்
கோவை – கனிமொழி
பாலக்கோடு – கோபி
பென்னாகரம் – கஜேந்திரன்
பெருந்துறை – அருணாச்சலம்
செங்கல்பட்டு – தியாகு
ஜெயங்கொண்டம் – கவிதா ராஜகுமாரன்
ஆம்பூர் – இம்தியாஷ்
சேலம் வடக்கு – செந்தில்குமார்
விருத்தாச்சலம் – விஜய்
ஈரோடு மேற்கு – ஆனந்த் மோகன்
நாமக்கல் – சதீஷ்
கிள்ளியூர் – சபின்
பத்மநாபபுரம் – கிருஷ்ணகுமார்
நெய்வேலி – ஆனந்த்
வால்பாறை – ஶ்ரீதரன்
வாசுதேவநல்லூர் – மனோகர்
திருவண்ணாமலை – உதயகுமார்
பண்ட்ருடி – மணிகண்டன்
பல்லடம் – முருகதாஸ்
திருப்பத்தூர் – திருப்பதி
ஜோலார்பேட்டை – முனுசாமி
வாணியம்பாடி – சையது புருகான்
கொளத்தூர் – வி.எஸ். பாபு
திரு-வி-க நகர் (SC) – அறிவிக்கப்படவில்லை
ராயபுரம் – அறிவிக்கப்படவில்லை
சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி – அறிவிக்கப்படவில்லை
அண்ணா நகர் – டாக்டர் ராம் குமார்
விருகம்பாக்கம் – சபரிநாதன்
வேளச்சேரி – கிரிஸ்டி பிரித்வி
அரூர் – ராகேஷ் கலைவாணன்
சங்கராபுரம் – ஜெகதீச பாண்டியன்
ஆத்தூர் – செல்வ பாரதி
கடையநல்லூர் – ஜலீல்
வானூர் – சுரேஷ்
குறிஞ்சிப்பாடி – ராஜ்குமார் என 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் உத்தேசப் பட்டியலை தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம் இருக்கக் கூடும் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
