சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் இந்து, சீக்கியம், பௌத்தம் ஆகிய மூன்று மதங்களை பின்பற்றக்கூடிய மக்களுக்கே பட்டியல் அந்தஸ்து என உத்தரவிட்டிருந்தது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் தீவிரமடைந்து வருகின்றன. அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் முழு மூச்சோடு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஐந்தரை கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்திருக்கின்றனர். அந்த வகையில் மாநிலத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளில் 44 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்கான தனித் தொகுதியாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட அந்த தனித் தொகுதிகளில் இந்து, சீக்கியம் மற்றும் பௌத்தம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றும் பட்டியல் இனத்தவரையே அனுமதிக்கக் வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் மனு தாக்கல் செய்துள்ளதால் இந்த விவகாரம் அரசியல் களத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆனால் கடந்த காலங்களில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்கள் எந்த மதத்தை பின்பற்றுபவராக இருப்பினும் அவர்கள்தமிழகத்தில் இருக்கக்கூடிய 44 தனித்தொகுதிகளில் போட்டியிட முடியும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால்..
இந்து, சீக்கியம் மற்றும் பௌத்தம் உள்ளிட்ட மதங்களை பின்பற்றுபவர்களுக்கு பட்டியல் அந்தஸ்து என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இதனை சுட்டிக்காட்டி தனது மனுவில் குறிப்பிட்டு இருந்த அவர், “இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம் மதத்தை பின்பற்றுபவர்களையே பட்டியல் இனத்தவர் என்று இந்திய அரசியல் சாசனம் தெரிவித்தது, இதையே உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் வலியுறுத்தியுள்ளது. தற்போது 44 தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவிகிதத்தினர் இந்து, சீக்கியம், பௌத்தம் மதத்தை பின்பற்றாதவர்கள் என்றும், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளதாக எனவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.
அதனால் வேட்புமனு பரிசீலனையின் போது அரசியல் சாசனம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீவிரமாக ஆய்வு செய்யவேண்டுமென அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிரான போக்கா?
இந்த செயல் சிறுபான்மையின மதத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்காக கருதப்படுகிறது. ஏற்கனவே இந்தியா முழுக்க இருக்கக்கூடிய கிறிஸ்தவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பினும் பட்டியலுக்குள் சேர்க்கப்படாமல் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே சேர்க்கப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு இருக்கக்கூடிய சாதிய ஒடுக்கு முறைகள் அப்படியே இருக்கக்கூடிய சூழலில் சான்றிதழ் அளவில் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனக் குறிப்பிட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு சார்ந்த எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன. அதேபோலவே இந்தியா முழுக்க இஸ்லாமியர்களுக்கும் இந்த நிலை நீடிக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுபவர்களுக்கே பட்டியல் அந்தஸ்து என சொல்லப்பட்டிருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
தேர்தல் சமயத்தில் இப்படி ஒரு மனுவை இந்து முன்னணி தலைவர் அர்ஜுன் சம்பத் மக்கள் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.தேர்தல் சமயத்தில் இப்படி ஒரு மனுவை இந்து முன்னணி தலைவர் அர்ஜுன் சம்பத் மக்கள் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
