3 வருடங்களாக ஹிட் இல்லை… பூஜா ஹெக்டே அதிரடி முடிவு

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவருக்கு கடந்த 3 ஆண்டுகள் சுமாராகவே இருந்தன. கடந்த 2024-ம் ஆண்டு அவருடைய ஒரு படம் கூட வெளியாகவில்லை. 2023 ஆம் ஆண்டில் ஒரு படம் மட்டுமே வெளியானது. அதுவும் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது.

கடந்த ஆண்டு சூர்யாவுடன் “ரெட்ரோ” படத்தில் நடித்தார். அந்த படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. மேலும், விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் சென்சார் பிரச்சினையால் இன்னும் திரைக்கு வராமல் உள்ளது.

Also Read
கே.ஜி.எப் பட இயக்குனருக்கு ’நோ’ சொன்ன டோவினோ தாமஸ்… காரணம் என்ன தெரியுமா?
3 வருடங்களாக ஹிட் இல்லை… பூஜா ஹெக்டே அதிரடி முடிவு

தற்போது படப்பிடிப்பில் இருக்கும் ஒரு தெலுங்கு படம் உட்பட இன்னும் இரண்டு படங்கள் அவர் கையில் உள்ளன.

இதற்கிடையில், ஷர்வானந்த் நடிக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு “ஜார்ஜ் கிரிஷ்” (George Krish) என பெயரிடப்பட்டுள்ளதாகவும், தற்போது முன்தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், பூஜா ஹெக்டேவின் திரை வாழ்க்கைக்கு முக்கிய திருப்பமாக இப்படம் அமையும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் என தெரிகிறது.

Source link