31.2 கோடி பார்வைகள்: டிரெய்லர் வியூசில் சாதனை படைத்த ‘துரந்தர்-2’

ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள துரந்தர் படத்தின் 2 ஆம் பாகம் வரும் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் ரிலீசுக்கு முன்னரே சாதனை படைத்துள்ளது. ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடித்து வெற்றி பெற்ற‘துரந்தர்’படத்தின் அடுத்த பாகம் ‘துரந்தர் -ரிவெஞ்ச்’படத்தை ஆதித்யா தார் இயக்கியுள்ளார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரெய்லர் வெளியான வெறும் 48 மணி நேரத்துக்குள் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 312 மில்லியன் பார்வைகளைக் கடந்து இந்த டிரெய்லர் சாதனைப் படைத்துள்ளது. அதுமட்டும் இன்றி 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் டிரெய்லர் இடம்பிடித்துள்ளது. துரந்தர் முதல் பாகம் பெரும் ஹிட் அடித்ததால், இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Source link