40 போட்டிகள், 0 டக்… ஐபிஎல்லில் அசத்திய தமிழன்

சென்னை,

ஐபிஎல் 19வது சீசன் மார்ச் 28 முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பல சாதனைகள் நிகழ்ந்து வரும் நிலையில், ‘டக்’ ஆக அவுட் ஆகாமல் தொடர்ந்து விளையாடும் வீரர்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

தமிழக வீரரும் குஜராத் அணியின் இளம் நட்சத்திரமுமான சாய் சுதர்சன், 2022-ம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து இதுவரை விளையாடிய 40 போட்டிகளில் ஒருமுறையும் ‘டக்’ ஆக அவுட் ஆகாமல் அரிய சாதனையை பதிவு செய்துள்ளார். 49.81 சராசரியில் 1793 ரன்கள் எடுத்துள்ள அவர், 2 சதங்கள் மற்றும் 12 அரைசதங்களையும் தனது பெயரில் வைத்துள்ளார்.

Also Read
ஐபிஎல் தொடரில் இருந்து சாம் கரண் விலகல்
40 போட்டிகள், 0 டக்... ஐபிஎல்லில் அசத்திய தமிழன்

கடந்த ஐபிஎல் 2025 சீசனில், 15 போட்டிகளில் 759 ரன்கள் குவித்து சாய் சுதர்சன் ‘ஆரஞ்சு கேப்’ வென்றார். 156.17 ஸ்ட்ரைக் ரேட்டில் அவரது நிலையான ஆட்டம் குஜராத் அணிக்கு பெரிய பலமாக அமைந்தது. வரவிருக்கும் சீசனிலும் இந்த சாதனை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link