கவுகாத்தி
அசாமில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அசாமில் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது.
இந்த நிலையில், மாநில அரசின் அருணோதய் சிறப்பு திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு சேர்த்து, 40 லட்சம் பெண்களுக்கு அவர்களுக்கு வங்கி கணக்கிற்கு, தலா ரூ.9 ஆயிரம் வீதம் நேரடி பண பரிமாற்றம் செய்யப்படும் என அசாம் அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டது.
பெண்களுக்கு அதிகாரமளித்தலின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா கூறினார். இதன்படி, மொத்தம் ரூ.3,600 கோடி இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி நாளை மார்ச் 10-ந்தேதி ஒரே நாளில் இந்த பணம் 40 லட்சம் பயனாளிகளை சென்றடைய உள்ளது.
