5 மணி நேரம் தாமதமான அனந்தபுரி எக்ஸ்பிரஸ்: பயணிகள் சிரமம்

நெல்லை,

கன்னியாகுமரி -திருவனந்தபுரம் இடையே 2-வது ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நாகர்கோவில் டவுனுக்கும் இரணியல் நிலையத்துக்கும் இடையே பாதை அமைக்கப்பட்டு, உயர் அதிகாரிகள் அதிவிரைவு ரெயில் சோதனை ஓட்டம் நடத்துகிறார்கள்.

இதற்காக பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, ஒருசில ரெயில்கள் வழித்தடமும் மாற்றம் செய்யப்பட்ட உள்ளது. இதனால் கொல்லத்தில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்டு வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. நெல்லை சந்திப்புக்கு இரவு 7.20 மணிக்கு வருவதற்கு பதிலாக, நள்ளிரவு 12 மணி அளவில் வந்து சென்றது. இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.

Source link