திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், முக்கூடல் மையலப்புரம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மையலப்புரத்தை சேர்ந்த காரல்மார்க்ஸ் (வயது 58) மற்றும் ஜீவானந்தம்(49) ஆகிய 2 பேரையும் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5.5 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து மேற்சொன்ன 2 பேரையும் நேற்று கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 5.5 கிலோகிராம் புகையிலை பொருட்களை கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்.
