53 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் அமெரிக்கா

பூமியின் ஒரே துணைக்கோளாக நிலவு உள்ளது. நிலவை ஆய்வு செய்வதில் விஞ்ஞானிகள் தீவிரம் காட்டு கிறார்கள் குறிப்பாக கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டிப் போட்டுக் கொண்டு நிலா குறித்து ஆய்வுகளைச் செய்தன. இதற்காகத் தொடர்ச்சியாகப் பல சாட்டிலைட்களையும் அனுப்பின. ஆனால், அதன் பிறகு இரு நாடுகளுமே நிலவு குறித்த ஆய்வுகளை இரு நாடுகளுமே விட்டுவிட்டன. இந்நிலையில் அரை நூற்றாண்டுக்குப் பிறகு நாளை மனிதர்களை நிலவுக்கு அனுப்பவுள்ளது நாசா. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கி, செயல்படுத்தி வருகிறது நாசா.

நிலவில் உள்ள கனிம வளங்களைப் பயன்படுத்துவது மற்றும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஒரு ‘பயிற்சி மையமாக’ நிலவைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ‘ஆர்டெமிஸ்-2’ திட்டத்தை ஆராய்ச்சி செய்து வருகிறது.

இதற்காக எலான் மஸ்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மற்றும் ஜெப் பெசோஸின் ‘புளூ ஆரிஜின்’ போன்ற தனியார் நிறுவனங்களும் நாசாவுடன் கைகோர்த்துள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனையோட்டத்தில் 3 அமெரிக்க விண்வெளி வீரர்களும், ஒரு கனடா வீரரும் 53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை நோக்கிப் பயணிக்கின்றனர். நாசாவின் ‘ஓரியன்’ விண்கலம் மற்றும் உலகின் சக்திவாய்ந்த ‘எஸ்.எல்.எஸ்’ ராக்கெட் மூலம் இவர்கள் விண்ணில் ஏவப்பட உள்ளனர்.

நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு திரும்பும் இந்த 10 நாள் பயணம், மனித குலம் இதுவரை விண்வெளியில் சென்றிராத ஆழமான பகுதிக்கு அவர்களை அழைத்துச் செல்லும். கடந்த 1972-ம் ஆண்டு ‘அப்பல்லோ 17’ விண்கலத்திற்கு பிறகு, மனிதர்கள் நிலவில் கால் தடம் பதிக்கவில்லை. தற்போது சுமார் ரூ.7½ லட்சம் கோடி (93 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரும் 2028-ம் ஆண்டு நிலவின் தென் துருவத்தில் மனிதர்களைத் தரையிறக்குவதே நாசாவின் இறுதி இலக்காகும்.

விண்வெளி ஆராய்ச்சியில் தனக்கு கடும் போட்டியாளராக உருவெடுத்துள்ள சீனா, 2030-க்குள் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட இந்த திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது. வானிலை சாதகமாக இருந்தால் இன்று நிலவு நோக்கிய இந்த பயணம் தொடங்கும். இதனை ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.

Source link